13. அரிவாட்டாய நாயனார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 13
இறைவன்: நீள்நெறி நாதர்
இறைவி : ஞானாம்பிகை
தலமரம் : குருந்தை
தீர்த்தம் : ஓமகம்
குலம் : வேளாளர்
அவதாரத் தலம் : கணமங்கலம்
முக்தி தலம் : கணமங்கலம்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : தை - திருவாதிரை
வரலாறு : சோழ நாட்டில் கணமங்கலம் என்னும் பதியில் அவதாரம் செய்தார். தினமும் இறைவனுக்கு செந்நெல்லும் செங்கீரையும் மாவடுவும் படைத்து வந்தார். அவருடைய செல்வம் சுருங்கியது. கூலிக்கு வேலை செய்து அதில் கிடைத்த செந்நெல்லை படைத்து வந்தார். கார் அரிசியைத் தாம் உண்டு வந்தார். எல்லா வயல்களிலும் செந்நெல்லே விளைந்த வேளையிலே அந்நெல் முழுவதையும் இறைவனுக்கே படைத்து தாமும் மனைவியும் பட்டினி கிடந்தனர். ஒரு நாள் தாயனார் இறைவனுக்குத் திருவமுது எடுத்துக்கொண்டு மனைவியுடன் சிவாலயம் சென்றார். வழியில் களைப்பினால் கால் தடுமாறி கீழே விழுகின்ற நிலையில் மனைவி தாங்கிப் பிடித்துக்கொண்டார். எனினும் நெல்லும் மாவடுவும் நில வெடிப்பில் விழுந்து சிதறி வீணாயின. அதனைக் கண்டு பொறாத நாயனார் இறைவனுக்கு அமுது செய்விக்க இயலாத நிலையில் வாழ்ந்து பயன் இல்லை என்ற முடிவுக்கு வந்தார். அரிவாளை எடுத்துத் தன் கழுத்தில் வைத்து அரிய முற்பட்டார். அப்போது இறைவனது திருக்கரம் நிலத்தில் தோன்றி அவரது கையைத் தடுத்தார். நிலத்திலும் விடேல் என்னும் மாவடுவை கடிக்கும் ஓசையும் கேட்கச் செய்தார். அவருக்கு அருள் புரிந்து இறைவனும் மறைந்தருளினார்.
முகவரி : அருள்மிகு. நீள்னெறி நாதர் திருக்கோயில், கணமங்கலம் – 614715 திருத்துறைப்பூண்டி வட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 08.00 – 11.00 ; மாலை 04.00 – 6.00
தொடர்புக்கு : 1.திரு. ஞானசுந்தர குருக்கள்
தொலைபேசி : 04369-347727
அலைபேசி : 9486155141
2.திரு.எஸ். இராமசந்திரன், அலைபேசி : 9943286352

இருப்பிட வரைபடம்


நல்ல செங்கீரை தூய மாவடு அரிசி சிந்த 
அல்லல் தீர்த்தாள வல்லார் அமுது செய்து அருளும் அப்பேறு 
எல்லையில் தீமையேன் இங்கு எய்திடப் பெற்றிலேன் என்று 
ஒல்லையில் அரிவாள் பூட்டி ஊட்டியை அரியல் உற்றார்
 
- பெ.பு. 923
பாடல் கேளுங்கள்
 நல்ல செங்கீரை



நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க